







இயற்கைக் களஞ்சியம் | Nature Education Kit (Tamil)
- 5-ன்து விளக்கச் சுவரிதழ்கள்
- 3-ன்று குறுங்கையேடுகள்
- ஓவியக் காகிதங்கள் மற்றும் விளையாட்டுகள்
- இந்தியப் பொதுப்பறவைகள்—பறவைப் பட அட்டைகள்
இந்தியாவில் வெவ்வேறு வாழ்விடங்களில் பொதுவாகத் தென்படும் பறவைகளைக் குறித்த 5-ன்து விளக்கச் சுவரிதழ்களின் தொடர். சுவரிதழ்களின் அளவு A1 (594 x 841 மி.மீ.) தடித்த காகிதத்தில் அச்சிடப்பட்டுள்ளது மற்றும் போக்குவரத்தை எளிதாக்க 2 மடிப்புகளுடன் உள்ளது.
இந்த பொதுப் பறவைகளின் கையடக்க குறுங்கையேடுகளை, பறவை நோக்கலின் போது எளிதில் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். தடித்த அட்டையும், வழவழப்பான தாளும் கொண்ட இக்குறுங்கையேடுகளில் உள்ள விளக்கப்படங்கள் பறவைகளை எளிதில் அடையாளம் காண உதவும்.
இதில் ‘நீங்களும் ஓர் இயற்கை துப்பவறிவாளர்’ விளையாட்டு, பறவைகளின் வாழ்க்கை – ஓர் விளையாட்டு மற்றும் 'புள்ளிகளை இணைக்கவும்' விளையாட்டு அடங்கும். ‘நீங்களும் ஓர் இயற்கை துப்பவறிவாளர்’–புறவுலகின் விந்தைகளை தேடிக் கண்டறிய குழந்தைகளுக்கு ஒரு சரியான விளையாட்டு இது. பறவையாய் இருப்பது எவ்வளவு கடினம் என்பதை ‘பறவைகளின் வாழ்க்கை’ விளையாட்டினை ஆடினால் நாமாகவே தெரிந்து கொள்ளலாம். வீட்டுக்குள்ளே, வகுப்பறைக்கு உள்ளே அல்லது வெளியே என எங்கு வேண்டுமானாலும் ஆடலாம். புள்ளிகளை கோடிட்டு இணைத்து வரைவதன் மூலம் பறவையை அடையாளம் காண உதவும் ஒரு எளிமையான செயற்பாடு.
நாம் காணும் நாற்பது இந்தியப் பொதுப்பறவைகளின் வண்ணப் படங்கள், அவற்றின் இடப்பரவல், வாழிடம், உணவு குறித்த சுவையான தகவல்கள் மற்றும் விளையாட்டுக்கான விதிமுறைகள் என பறவைகள் மற்றும் இயற்கையின் மீது குழந்தைகள் ஆர்வம் கொள்ளும் வகையில் "இந்தியப் பொதுப்பறவைகள்" என்ற அறிவுப்பெட்டகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கும், ஆரம்ப நிலை பறவை ஆர்வலர்களுக்கும் வீட்டுக்குள், வகுப்பறைக்குள் விளையாடவும் அதே வேளையில் பறவைகளைப் பற்றி அறிந்து கொள்ளவும் இந்த விளக்கப் பட அட்டைகள் உதவும். என்னென்ன விளையாட்டுகள் ஆடலாம், எப்படி விளையாடுவது என்பதற்கான வழிமுறைகளைக் கொண்ட காணொளிகளை இங்கே காணலாம்.
_________________________________________________________________________
இந்தியாவில் இயற்கை பாதுகாப்புக்கு ஆதரவளித்தல்
உங்கள் கொள்முதல் குழந்தைகளை மையமாகக் கொண்ட எங்கள் கல்வி முயற்சிகளை ஆதரிக்கிறது. மேலும் தகவல்களுக்கும் இலவச பதிவிறக்கங்களுக்கும், Early Bird-ஐ பார்வையிடவும்.
_________________________________________________________________________
Early Bird-உடன் தொடர்பு கொள்ளுங்கள்
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், யூடியூப் ஆகியவற்றில் எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
வாட்ஸ்அப்பில் எங்கள் பொது சேனலில் சேருங்கள்.
எங்கள் அஞ்சல் முகவரிக்கு பதிவு செய்யுங்கள்.
பறவைகள் குறித்த இலவச மல்டிமீடியா ஆன்லைன் பாடமான 'தி வொண்டர் ஆஃப் பேர்ட்ஸ்' க்கு பதிவு செய்யுங்கள்.